யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
வீதியில் வேகமாக பயணித்த ஹயஸ் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களி மீது ஹயஸ் வாகனம் ஏறிச்சென்றுள்ளது.
விபத்தில் 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.