யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், கனடா நாட்டிற்கு பயணமாகவிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குறித்த இளைஞர், மதிலுடன் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 8:00 மணியளவில், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில், சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த, 22 வயதான பி.பனுஜன் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர், நாளையதினம் கனடாவுக்கு பயணமாகவிருந்தமை தெரியவந்துள்ளது.இந்த நிலையில், சாவகச்சேரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.