யாழ்ப்பாணம் – கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நீண்ட காலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை- இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றதையடுத்து சிலுவைப் பாதை ஆலயத்தைச் சுற்றி வலம்வரும் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று காலை 7 மணியளவில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, திருவிழா நிறைவுபெற்றது.
இம்முறை கச்சதீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணைதூதுவராலயம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து மொத்தமாக 5,100 பேர் கலந்துகொண்டனர்.