யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கே தொற்று

0
182

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் கடந்த வாரம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இரண்டு பேரும் கோவிட் -19 சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.