யாழ்ப்பாணம் மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தில், தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் ‘கால்கோள் விழாவும், கல்வி ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வும்’ இன்று, சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் சுதாமதி தயாபரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், லண்டனில் வசிக்கும் பழைய மாணவர்களான ஆர்.விஜயரஞ்சினி, எஸ்.நவரஞ்சினி, ஜே.ஸ்ரீரஞ்சினி, பழைய மாணவர் சங்க செயலாளர் க.ரஜனிகாந்தன் ஆகியோர், விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதன் போது, மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் இரண்டும், மடிக்கணினி ஒன்றும், புத்தகப் பொதிகள் மற்றும் 5 மாணவர்களுக்கான மாதாந்த உதவு தொகைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


