யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களில் 99 சதவீதத்தினர் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி!

0
229

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன. அதனடிப்படையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதத்தினர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், 46 மாணவர்கள் 8ஏ சித்திகளையும், 29 மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, 2021 மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற பரீட்சையில் 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 367 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.