யாழ். இளவாலை கிட்ஸ் வேள்ட் முன்பள்ளி ஒளி விழா நிகழ்வு

0
170

கிறிஸ்மஸ் பிறப்பைக் கொண்டாடும் முகமாக பல்வேறு இடங்களிலும் ஒளி விழா நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இளவாலை கிட்ஸ் வேள்ட் முன்பள்ளியின், ஒளி விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாதகல் சென் தோமஸ் பாடசாலையின் அதிபர் ரமணி ஜெயந்தன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக ஊடகவியலாளர் மாலினி அஜந்தன், இளவாலை பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்பள்ளி ஒளி விழா நிகழ்வில், மாணவர்களின் கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன. ஒளி விழா நிகழ்வை முன்னிட்டு, முன்பள்ளி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விருந்தினர்களால் நிகழ்வில் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.