யாழ். இளவாலை விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த சித்தார்த்தன் எம்.பி

0
191

யாழ்ப்பாணம் – இளவாலை வடக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது அப்பகுதி விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

தனியார் கம்பனி ஒன்று தமது பிரதேச கிணறுகளில் இருந்து ஐஸ் உற்பத்திக்காக நீர் எடுத்து செல்வதால், தமது விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் குறைவதாகவும், எதிர்காலத்தில் உவர் நீராக மாறும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு 200க்கு மேற்பட்ட கொடி முந்திரிகை செய்கையாளர்களும் ஏனைய விவசாய செய்கையாளர்களும் பாதிப்படைந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மக்களின் பிரச்சினையை கேட்டறிந்த சித்தார்த்தன் எம்.பி, நீர் எடுப்பதாக மக்களால் தெரிவிக்கப்பட்ட கம்பனியையும் பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், இளவாலை வடக்கு விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.