யாழ்ப்பாணம் உயரப்புலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், இளவாலைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய 25 வயதுடைய சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரைக் கைது செய்யும் போது அவரது உடமையிலிருந்த ஒரு கிராம் கஞ்சா மற்றும் திருடப்பட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.