யாழ். திருநெல்வேலியில் துண்டுப் பிரசுரம் விநியோகம்!

0
270

தமிழ் மக்களின் அபிலாசைகளை, 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால், யாழ்ப்பாணம் திருநெல்வேலியில், துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இன்று, திருநெல்வேலி சந்தைப் பகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி அணியினர், துண்டுப் பிரசுர விநியோகத்தை மேற்கொண்டனர்.