யாழ். துன்னாலை பிரதேசத்தில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துன்னாலை பிரதேசத்தில், அரச புலனாய்வாளர்களின் இரகசிய தகவலுக்கமைய, இராணுவத்தினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் நெல்லியடி பொலிஸாரினால் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நீதிமன்றால் திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
