யாழ்.மத்திய கல்லூரி மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்வு

0
206

யாழ்ப்பாண மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி, இலவச பாடப்புத்தகம் வழங்கும் வேலை திட்டம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச சீருடை துணி, பாடப்புத்தகம் வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க நிகழ்வு இன்றைய தினம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கல்லூரியில், கல்லூரியின் அதிபர் இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்ப்பாண வலய கல்விப் பணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வட மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரஸ், ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்களை வழங்கி வைத்தனர்.