உணவு பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேசத்திற்குட்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களான பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அரியகுமார், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் இருதயராசா, மற்றும் வடமராட்சி வடக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். போசாக்கு தொடர்பான இணைப்புக் குழு கூட்டத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள், போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்குரிய வேலைத்திட்டஙகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வீட்டுத் தோட்டங்களை ஊக்கிவித்தல், உட்பட பல்வேறு போசாக்கை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.