யாழ். வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறந்து வைப்பு!

0
79

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்று (17) திறந்துவைக்கப்பட்டது.

அத்தோடு, வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வாகன தரிப்பிடம், நலன்புரிச் சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதி பல காலமாக இயங்காமல் காணப்பட்டது.

யாழ் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறப்பு | Opening Hospital At Vattukkottai Hospital Jaffna

வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதி மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறப்பு | Opening Hospital At Vattukkottai Hospital Jaffna

வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபால, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பதவி நிலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், நலன்புரிச் சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.