24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். வரணி நாவற்காடு கிராம உத்தியோகத்தரை, இடம் மாற்ற வேண்டாம் எனக்கோரி, மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, வரணி நாவற்காடு கிராம உத்தியோகத்தரை, இடம் மாற்ற வேண்டாம் எனக்கோரி, மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நாவற்காடு – கிராம அலுவலராக, கந்தசாமி தர்மேந்திரா கடமையாற்றி வந்தார்.
நாவற்காடு பிரதேசத்திற்கு, கிராம அலுவலராக நியமிக்கப்பட்டு, 6 மாதங்கள் பூர்த்தியாகாத நிலையில், அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி, கிராம மக்களின் கோரிக்கை கடிதத்துடன், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், சாவகச்சேரி பிரதேச செயலரை சந்தித்திருந்தனர்.

எனினும், மக்களின் கோரிக்கைக்கு, பிரதேச செயலாளரால் உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில், பிரதேச மக்கள் இணைந்து, இன்று, நாவற்காடு பொது மண்டபத்தில் அமைந்துள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகம் முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles