யுக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பித்து இன்று வெள்ளிக்கிழமையுடன் (24) ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இந்நிலையில், நியூ யோர்க்கிலுள்ள ஐநா பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா உட்பட 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 32 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
2022 பெப்ரவரி 2 ஆம் திகதி யுக்ரைனுக்குள் சுமார் 200,000 ரஷ்ய படையினரை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனுப்பினார்.
அதன்பின் நடந்த தாக்கதலில் குறைந்தபட்சம் 7199 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என ஐநா மதிப்பிட்டுள்ளது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.