யூடியூபர் இயக்கும் படத்தில் நயன்தாரா

0
192

நடிகை நயன்தாரா, ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இது அவருக்கு 75-ஆவது படம். ஜெய், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. தமன் இசை அமைக்கிறார்.

இதையடுத்து நயன்தாரா நடிக்கும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டியூட் விக்கி என்ற யூடியூபர் இயக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்இ நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.