யூதர்களுக்கு உணவுப் பொதிகளை விநியோகிக்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டில் டெலிவரூ ( Deliveroo) இணைய உணவு விநியோகப் பணியாளர் ஒருவரை பிரான்ஸ் அரசு நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளது.
பிரஸ்தாப விநியோகப் பணியாளர் யூதர்களுக்கு உணவு வழங்க மாட்டேன் என்று அடம்பிடித்ததை அடுத்து அது பற்றி உண
வகங்கள் பலவும் முறைப்பாடுகளைச் செய்திருந்தன. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுதலுக்கு எதிராக ஸ்ராஸ்பூக் குற்றவியல் நீதிமன்றம் ஒன்று அந்தப் பணியாளருக்கு நான்கு மாதங்கள் சிறை த்தண்டனை விதித்திருந்தது. தண்டனை
காலம் முடிந்ததும் அவர் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்படுவார் என்று உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.
அதன்படி அல்ஜீரியப் பிரஜையான அந்தப் 19 வயதுடைய பணியாளர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இத்தகவலை உள்துறை அமைச்சர் தனது ருவீற்றர் பதிவில் வெளியிட்டுள்ளார். “யூத வெறுப்புச் செயல்களுக்கு பிரான்ஸ்
மண்ணில் இடம் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
யூதர்களுக்கு உணவு வழங்க மறுத்த தனது செயலை ‘டெலிவரூ’ இணைய உணவு விநியோக நிறுவனம் தடுக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி தனது நடவடிக்கையை அந்தப்பணியாளர் ஒப்புக் கொண்டிருந்தார்.
இச்சம்பவத்துக்காக டெலிவரூ நிறுவனம் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை.