ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது நியாயமானது – நீதி அமைச்சர்!

0
150

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது நியாயமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வெளிப்படைத் தன்மைக்காக தாம் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கேட்டறிந்துள்ளதுடம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் பரிந்துரை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.