ரணில் பாராளுமன்றம் செல்வது புதிய அரசு அமைவதற்கான அடித்தளம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தெல்லிப்பளை தொகுதி அமைப்பாளர் தாமோதரம்பிள்ளை சிறீ ராஜ் தெரிவித்தார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாட்டின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றம் செல்வது புதிய அரசு ஒன்று அமைவதற்கான அடித்தளம் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் ,தெல்லிப்பளை தொகுதி அமைப்பாளரும், வலிவடக்கு பிரதேச சபையின்உறுப்பினருமான தாமோதரம்பிள்ளை சிறீராஜ் தெரிவித்தார்
ஐக்கிய கட்சியின் தலைவர் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றம் செல்லும் சம்பிரதாயபூர்வமான நிகழ்வு இடம்பெறவுள்ளது கடந்த 43 வருடமாக பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களின் பேராதரவுடன் அரசியலில் நிலைத்து நிற்கும் ஒரே ஒரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே
எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு 25 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசி வேண்டி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூஜை வழிபாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு.
மேலும்
தற்போது ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்வது நாட்டில் புதிய அரசு உருவாகுவதற்கான சாத்தியக் கூறு காணப்படுகிறது தற்போதைய கோட்டபாய அரசு மீது மக்கள் வெறுப்பு கொண்ட நிலை காணப்படுகின்றது
அதாவது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்து எரிபொருள் விலை உலகில் எங்கும் இல்லாதவாறு உச்ச நிலையில் காணப்படுகிறதுஎனவே தற்பொழுது விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்வது என்பது மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றதொரு விடயமாக காணப்படுகின்றது
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மக்கள் சுதந்திரமாக வாழ்ந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசானது மக்கள் மீது அராஜக ஆட்சியினை புரிந்து வருகின்ற நிலைமை காணப்படுகின்றது
குறிப்பாக அடக்குமுறையினை மக்கள் மீது பிரயோகித்து குடும்ப ஆட்சி முறையை நிலைநாட்டுவதற்கு இந்த கோத்தா அரசு முயல்கின்றது எனவே மக்கள் தற்போதைய அரசினை வெறுக்கும் நிலையில்தான் எமது கட்சித் தலைவர் பாராளுமன்றம் செல்கின்றார்
அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா இடர் நிலையின் காரணமாக கல்வி செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது
அதாவது நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வசதி படைத்தவர்களின் குழந்தைகள் மாத்திரம் சூம்செயலி மூலம் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்
ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது அதேபோல் வடக்கு கிழக்குப் பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட 90 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் குழந்தைகளும் இந்த கற்றல் செயற்பாடுகளின் போது பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளார்கள்
ஆனால் இந்த அரசாங்கம் அந்த மாணவர்கள் தொடர்பில் எந்த கரிசனையும் செலுத்தவில்லை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ந்தும் அந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்
ஆனால் கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராகவும் ஏனைய அமைச்சுக்களில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல அர்ப்பணிப்பான சேவைகளை புரிந்தமை மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்திருக்கிறது
தற்போதைய நிலையில் மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்கும் நிலையில்
மீண்டும் ஒரு புதிய ஆட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விரைவில் உருவாகும் நிலை காணப்படுகிறது
அதற்கு அடித்தளமாகவே எதிர்வரும் 23ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்கின்றார் என முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரின் செயலாளரும்,ஐக்கிய தேசியக் கட்சியின் தெல்லிப்பளை தொகுதி அமைப்பாளரும் வலிவடக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான தாமோதரம்பிள்ளை சிறீராஜ் தெரிவித்தார்.