புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசவோ – தலையிடவோ மாட்டேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் அமைச்சர்களாக நியமியுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில், இருவரும் சந்தித்துப் பேசியபோதே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் அரசியல் நிலைமை, பொருளாதார விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.