ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முல்லை. மாங்குளத்தில் பிரசாரம்!

0
64


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜன் தலைமையில், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக மாங்குளத்தில் இன்று பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.