ரமழானை முன்னிட்டு, பேரிச்சம்பழத்துக்கான வரி குறைப்பு!

0
180

பேரிச்சம்பழத்துக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியை குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பேரிச்சம்பழத்துக்கான பண்ட வரி 200 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.