ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு ; பல ரயில் சேவைகள் இரத்து

0
77

இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் இன்று வெள்ளிக்கிழமை காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை முதல் குறித்த சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்  இயந்திர சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வுகள் தாமதம் மற்றும் பல பிரச்சினைகள் காரணமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இயந்திர பொறியியலாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.