கொழும்பில் சில ரயில்வே ஊழியர்கள் திடீரென தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் ரயில் சேவைகளை திட்டமிட்டப்படி இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாளைவேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம், நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறையை திருத்தியமைத்து, ஏறக்குறைய 5 வருடங்களாக தாமதமாகி வரும் தர பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள அந்த சங்கம் தீர்மானித்துள்ளது.