ரயில் நிலைய கட்டிடங்கள் வணிக நிலையங்களாக அபிவிருத்தி

0
60

ரயில் நிலையங்களை அண்டியதாக அமைந்துள்ள கட்டிடங்களை வணிக நிலையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனித்தெரு, தெஹிவள, மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்க விருப்பம் தெரிவிக்கின்ற முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்காக விருப்புமனுக் கோரப்பட்டுள்ளது. 

அதில், இலங்கையில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான விருப்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையால், அரச-தனியார் பங்குடமை முறையின் கீழ் நாடளாவிய ரீதியில் ஏனைய ரயில் நிலையங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான போட்டி அடிப்படையிலான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொண்டு தகைமையுடைய முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.