நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று ரயில் மீது பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று லாகோசில் உள்ள இகேஜா பகுதியில் இன்ட்ரா-சிட்டி ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் உயிரிழந்தனர்.
84 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பேருந்து சாரதி போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.