ரஷிய பெண்கள், 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற வேண்டும்- புடின் வலியுறுத்து

0
168

ரஷியாவில் கடந்த 1990இல் இருந்து பிறப்பு விகிதம் குறைந்து வருவதுடன் உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் ரஷிய பெண்கள், 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெறுவதை நடைமுறையாக்கி, அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷியாவின் மக்கள் தொகையை உயர்த்துவது, முக்கிய இலக்கு என ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்.

ரஷியாவின் மக்கள் தொகை 2023 ஜனவரி 1ஆம் திகதி கணக்கின்படி 14 கோடி 64 இலட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகவிருந்தது. இது 1999ஆம் ஆண்டு புடின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும்.