ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதலை எதிர்கொள்ள உலகம் தயாராகவேண்டும்!

0
158

ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதலை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைநகர் கீவில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்து சி. என். என். ஜேக் தாப்பருக்கு அளித்த பிரத்யேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

விளாடிமிர் புடின் அணு ஆயுதங்கள் அல்லது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை ஆரம்பிக்கலாம். ஏனெனில், அவர் உக்ரைன் மக்களின் உயிர்களை ஒருபோதும் மதிப்பதில்லை.

ரஷ்யாவுக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், தயாராக இருக்க வேண்டும். ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் அது உக்ரைனுக்கு மட்டுமல்ல. முழு உலகத்துக்குமே ஆபத்து – என்றார்.

இதேவேளை, ரஷ்யாவின் போர் கப்பல் உக்ரைன் படைகளால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூழ்கடிக்கப்பட்டதையடுத்து உக்ரைன்மீது ரஷ்யா மீண்டும் மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

தலைநகர் கீவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுககணைகளை பயன்படுத்தி ரஷ்யா அழித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஐ)