ரஷ்யாவில் காட்டுத் தீ : 21 பேர் உயிரிழப்பு!

0
146

ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென பரவிய காட்டுத்தீயில் சிக்கி, 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்ததில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஹெக்டெயர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கோடை வெயில் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.