ரஷ்யாவில், விமான விபத்து – வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு!

0
135
TVER, RUSSIA - AUGUST 23: (----EDITORIAL USE ONLY - MANDATORY CREDIT - 'WAGNER TELEGRAM ACCOUNT / HANDOUT' - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS----) A view of site after a private jet, allegedly carrying Wagner head Yevgeny Prigozhin and other passengers crashed in Russia's northwestern Tver region, Russia on August 23, 2023. Ten people died in a private jet crash in Russia's northwestern Tver region. Yevgeny Prigozhin, head of the Wagner private military group, was among the passengers on the plane, according to the Federal Air Transport Agency. (Photo by Wagner Telegram Account/Anadolu Agency via Getty Images)

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு சென்ற விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பணிக்குழாமினர் உட்பட விமானத்தில் இருந்த 10 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் படையும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், தமக்கு போரின் போது உரிய ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என கூறி வாக்னர் படை மொஸ்கோவில் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டு நெருக்கடியை உருவாக்கியிருந்தது.

இதன் பின்னர், சமரச பேச்சுவார்தையின் மூலம் வாக்னர் படை, உக்ரேனில் ரஷ்ய படையிருடன் இணைந்து செயற்பட்டுவரும் நிலையில், வாக்னர் படையின் தலைவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.