உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவுக்கு, அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வரும் சூழலில் ரஷ்யா வடகொரியாவுக்கு உணவுப் பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களைப்பெற முயற்சிப்பதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் ஊடகப் பேச்சாளர் ஜான் கெர்பி தெரிவித்துள்ளார்.