ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய் மீது 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குள் ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் உடன்படவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்துவிட்டதாக புதின் விமர்சித்ததற்கு டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.