ரஷ்ய ஜனாதிபதி – ஈரான் அமைச்சர் சந்திப்பு!

0
9

அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர்  அப்பாஸ் அராக்சி இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில்  ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக, ஈரான் அதிகாரிகள் கூறுகையில், அணுசக்தி பிரச்சனையைப் பொறுத்தவரை, எங்கள் நண்பர்களான சீனா மற்றும் ரஷ்யாவுடன் நாங்கள் எப்போதும் நெருக்கமான ஆலோசனைகளைக் கொண்டிருந்தோம். இப்போது ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய  இது ஒரு நல்ல வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.