ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 68 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்- ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க!

0
40

ரஷ்யாவுக்கு சொந்தமான ரெட்விங் எயர் லைன்சில், 68 ஆயிரம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ளனர். மொஸ்கோ உட்பட 6 ரஷ்ய நகரங்களில் இருந்து வாரத்திற்கு ஆறு விமானங்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விமானங்கள் அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளன. இவ்வாறு வருகை தரும் 68 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கைக்கு 102 மில்லியன் டொலர் கிடைக்கும்.
2022 இல், ரெட்விங்ஸ் மூலம் 94 ஆயிரத்து 795 சுற்றுலாப் பயணிகளை எனது காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்து கொண்டுவந்தேன்.

மத்தல விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த இவர்கள் மூலம், 150 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது. நான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளேன்.
அந்தவகையில் 9 வருட கால அரசியல் பழிவாங்கலை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது. என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.