ரஸ்யாவின் தாக்குதல் அச்சத்தால், உக்ரைன் நாடாளுமன்றக் கூட்டம் இரத்து!

0
28

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஸ்யா தாக்குதலை நடாத்திய நிலையில், நேற்றைய தினம், உக்ரைன் நாடாளுமன்ற
கூட்டம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போரில் வெளிநாட்டு ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணையை, ரஸ்யா பயன்படுத்தியது.

ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதல் நடத்துவதால் அந்த அச்சுறுத்தல் காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டதாக உக்ரைன் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.