ரஸ்யாவுடன் கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ரஸியாவுடன் கிரிமியா தீபகற்பம் இணைக்கப்பட்ட பின்னர் கடந்த 2020இல் இந்த பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 19 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப்பாலம் புகையிரதங்கள் மற்றும் பிற வாகனங்கள் பயணிப்பதற்கென இரு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பாலத்தின் மீது நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பில் வாகனப்பிரிவிலுள்ள சாலை சேதமடைந்துள்ளதோடு அங்கிருந்த புகையிரத தண்டவாளத்தில் பயணித்த புகையிரதத்தின் எரிபொருள் பெட்டிகளும் தீப்பிடித்து எரிந்துள்ளன. அதனையடுத்து அப்பகுதியூடான போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போக்குவரத்துக்கள் ஆரம்பமாகியுள்ளன. இதனால் பாலத்திற்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ரஸிய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.
Home வெளிநாட்டு ரஸ்யா- கிரிமியாவை இணைக்கும் பாலத்தில் குண்டுவெடிப்பு: தடைப்பட்டிருந்த போக்குவரத்து மீள ஆரம்பம்