ரஸ்ய தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் தாக்குதல் நடாத்த முயற்சிப்பதாக, ரஸ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கு இடையிலான போர் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
மாஸ்கோ மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில், அந் நகரின் மேயர் குறிப்பிடுகையில்.. மாஸ்கோவை நோக்கி வந்த ட்ரோன் ஒன்று நகரின் வெளிப்புற பகுதியில் வைத்து சுட்டு வீழ்;த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிரையான்ஸ்க் பகுதியிலும், உக்ரைனுக்குச் சொந்தமான 12 ட்ரோன்களை, ரஸ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.