ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் கனடாவை வீழ்த்தியது ஐக்கிய அமெரிக்கா

0
94

லக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பழமை வாய்ந்த ‘கிரிக்கெட் பகையாளிகள்’ ஆன ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் டெக்சாஸ் டலாஸ், க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கில் (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற 9ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் ஆரம்பப் போட்டியில் 7 விக்கெட்களால் ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெற்றது.

இரண்டு வட அமெரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஏ குழுவுக்கான அப்போட்டியில் கனடாவினால் நிர்ணயிக்கப்பட்ட 195 ஓட்டங்கள் சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் ஸ்டீவன் டெய்லர் ஓட்டம் பெறாமலும் அணித் தலைவர் மொனான்க் பட்டேல் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்க, ஐக்கிய அமெரிக்கா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அண்ட்றீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் வெற்றியை இலகுவாக்கினர்.