ருவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்குவதற்கு உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக அவர் 430 கோடி டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமாராக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்) வழங்குவதற்கு அவர் தயாராக உள்ளார்.
முன்னதாக ருவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை அவர் வாங்கினார். இதன் பின்னர் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சேரவுள்ளாரென அவர் அறிவித்தார். ஆனால், பின்னர் அந்த முடிவை திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையிலேயே அவர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு அவர் நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில் ருவிட்டரில் அதிரடியான முடிவுகள் பலவற்றை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.