ரெட்ணம் சுவாகர் எழுதிய ‘இரகசியங்களால் ஆன ஒற்றைவரிக்கோடு’ எனும் நூல் வெளியீட்டு விழா

0
100

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர் எழுதிய ‘இரகசியங்களால் ஆன ஒற்றைவரிக்கோடு’ எனும் நூல் வெளியீட்டு விழா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்
கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், விசேட அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் வரவேற்புரை, தலைமையுரை புத்தக அறிமுகவுரையை தொடர்ந்து புத்தக அறிமுகம் மற்றும் விமர்சனமும்; இடம்பெற்றது.
நூலின் முதற் பிரதியினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஏனைய அதிதிகளுக்கும் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.