ரோஹித் சர்மாவுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு

0
154

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார்.

இதேவேளை, 2022 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தகுதிப்பெற்றுள்ளன.

சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இவ்வாறு இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

நடப்பு செம்பியனான இந்திய அணி சுப்பர் 4 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணியும் சுப்பர் 4 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இன்றைய தினம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்றாம் நிலை தெரிவுக்காக விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.