லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை

0
179

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நாளை நள்ளிரவு முதல் மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதா லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் 4,664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை 99 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.