லெபானில் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.லெபானின் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம், இஸ்ரேல் இராணுவம் நடாத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக, லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத் தாக்குதலில் 44 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பால்பெக் ஹர்மெல் நிர்வாகத்திற்குட்பட பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.இதேபோன்று, தெற்கு லெபானில் உள்ள நபாடிஹ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மீதும், இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.