எதிர்வரும் சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது