வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது!

0
146

பல்வேறு நபர்களை ஏமாற்றி வங்கி அட்டைகளை அபகரித்து சுமார் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை கடுவெல பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மல்வான பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் கடுவலை, நவகமுவ, மாலபே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் நபர் அட்டையை உள்ளே செருக முடியாத வகையில் இயந்திரத்தை பூட்டி வைத்துள்ளார்.
பின்னர், பணம் எடுக்க உதவுவதாக கூறி, கார்டின் பின்னைக் கேட்டு, பிற ஏடிஎம் மையங்களுக்குச் சென்று, பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் இன்று கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.