வசந்த முதலிகே, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை, விளக்கமறியலில்!

0
173

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக தொகுக்கப்பட்ட சாட்சியங்களின் சுருக்கத்தை, அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு, நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே, இன்று, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.