உக்ரைனுக்கு எதிரான போரில், 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை, ஈடுபடுத்த, ரஸ்யா, முயற்சிகளை எடுத்து வருதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெல்ஜியத்தில் நடைபெற்ற, ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில், கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘எங்களுடைய உளவு பிரிவினரின் தகவலின் அடிப்படையில், எமக்கு எதிரான போரில், 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஸ்யா திட்டமிட்டுள்ளமை
தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் ரஸ்யா வடகொரிய வீரர்களை பயன்படுத்தியிருந்தது என நாங்கள் கூறி வந்தாலும், இம்முறையே சரியான எண்ணிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது’ என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.