
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குழுவின் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
செம்பியன் பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்காலத்தில் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் போதைப்பொருள் இல்லாத சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனும் எண்ணக்கருவில் கிராம போதைத் தடுப்பு குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
கலந்துரையாடலில் கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.