வடக்கில் முதலீடு செய்யுங்கள்; புலம்பெயர் தமிழருக்கு ஜனாதிபதி அழைப்பு

0
207

புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக உள்ளேன். வட மாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் – இவ்வாறு தம்மை சந்தித்த அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் திருமதி விக்ரோறியா நூலண்டிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்துவம் குறித்து விக்ரோறியா நூலண்ட் சுட்டிக்காட்டியமைக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் ஜனாதிபதி திருமதி நூலண்டிற்கு தெளிவுபடுத்தினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.